2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விசேட கலந்துரையாடல்

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையில் கபில நிற தத்திகளால் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக, நெற் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், விவசாயத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஹுசைன், மாவட்டப் பணிப்பாளர் திலகராஜ், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நிரஞ்சலா, நெற்செய்கை ஆராயச்சி நிலைய அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட நெற்செய்கையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்படி தாக்கம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றி அதிகாரிகளால் விளக்கம் கொடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X