2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு அழைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.சபேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றையதினம் மட்டக்களப்பு இல்லத்திற்கு வருகை தந்த பொலிஸார்; தனக்கான அழைப்பாணையை வழங்கிச் சென்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தன்னை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் எதற்காக அழைத்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும் கடந்த காலங்களிலும் இது போன்று பல தடவைகள் தன்னை கொழும்புக்கு விசாரணைக்காக இவர்கள் அழைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X