2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வீடுகள் இல்லாதவர்களின் விவரங்கள் திரட்டல்

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் மற்றும் காணி இல்லாதவர்களின் விவரங்கள் திரட்டப்படுவதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மூலமாக திரட்டப்படும் இந்த விவரங்களை வைத்துக்கொண்டு வீடுகள் இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

காத்தான்குடிப் பிரதேச செயலகப் பிரிவில் 2014ஆம் ஆண்டு வெள்ளம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளைப் புனரமைப்பதற்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை, அப்பிரதேச செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  '2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்ட 128 பேர்  அடையாளம் காணப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன.
இந்த முதற்கட்டக் கொடுப்பனவைப் பயன்படுத்தி வீடுகளைப் புனரமைக்க வேண்டும். மாறாக, ஏனைய தேவைகளுக்கு இந்தப் பணத்தை பயன்படுத்தக்கூடாது.

முதற்கட்டக் கொடுப்பனவில் வீடுகளின் புனரமைப்பு வேலை செய்து முடிக்கப்பட்டால், மீதி 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்றார்.  

மேலும், காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X