Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி நெறி இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பணிப்பாளர் சந்திமா சிகேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வளவாளர்களாக வட மாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பருவ கல்விப் பணிப்பாளர் ஜெயா தம்பையா, மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பருவ கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயா தம்பையா ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது,பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதும் பராமரிப்பு வழங்கும் குழுவினரை இனங்காண்பதும் அவர்களை விழிப்பூட்டுவதும் பெற்றோரை விழிப்பூட்டுவதற்காக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளும் பொறுப்புகளும் முன்பிள்ளைப் பருவச் சிறார்களுக்கான ஆக்கச் செயற்பாடுகள், முன்பிள்ளைப் பருவச் சிறார்களுக்கான அழகியற்கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தலைப்புக்களில் விரிவுரைகள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை,நாளை வெள்ளிக்கிழமை, மன அழுத்த முகாமைத்துவம், முன்பிள்ளைப் பருவ சிறார்களுக்கான விளையாட்டுக்கள், விசேட தேவையுடைய பிள்ளைகளை விளங்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட தலைப்புக்களில் விரிவுரைகள், பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago