Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெறும் வீதி விபத்துகளை தடுப்பதற்காக காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை போடப்பட்ட வீதி வேகத்தடை இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அகற்றப்பட்டது.
காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுப்பதற்காக காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியிலேயே வீதித் தடை இடப்பட்டிருந்தது.
இந்த வேகத்தடை சற்று உயரமாக போடப்பட்டதால் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதற்கு சிரமாக இருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளிடத்தில் தெரிவித்ததையடுத்து இந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
இந்த வேகத்தடையை எவ்வாறு போடுவது என்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் வேகத்தடை போடப்படுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago