2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இளைஞர் ஒருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மருதமுனை பகுதியை சேர்ந்தவர் எனவும் இவரை ஒருவர் அழைத்துவந்து கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரனால் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் குறித்த யுவதியை அனுமதித்துவிட்டு தான் பயணித்த காரை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த இளைஞனை தேடிவருவதாகவும் குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X