Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள சில பூச்சாடிகள், இன்று புதன்கிழமை (11) அகற்றப்பட்டன.
காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் மற்றும் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லால் பி துஸார ஆகியோர் முன்னிலையில் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் இந்த பூச்சாடிகளை அகற்றினர்.
காத்தான்குடி பிரதான வீதியின் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம், ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் குர் ஆன் சதுக்க சந்தி ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள பூச்சாடிகள் இதன்போது அகற்றப்பட்டதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு சில இடங்களில் காணப்படும் பூச்சாடிகள் காரணிகளாக இருப்பதாக அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினதும் பிரதேச செயலாளரினதும் பரிசீலனை அறிக்கை காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அனுப்பப்பட்டதையடுத்து குறித்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலுமுள்ள பூச்சாடிகளை அகற்றுவதற்கு காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியிருந்தார். 


52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago