2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விநாயகர் கோவிலை புனரமைக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட புணாணை, ஜெயந்தியாயக் கிராமத்தில்; சுமார் 55 வருடங்கள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. எனவே, இக்கோவிலை உடனடியாகப் புனரமைத்துத் தந்து, பொதுமக்கள் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வாகரைப் பிரதேச செயலாளரிடம் ரமணமகரிஷி நற்பணிமன்றக் கிளைத் தலைவர் எஸ்.செல்லத்துரை கோரிக்கை விடுத்துள்ளார்;.
 
மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் மக்கள், தங்களின் பயணத்தில் தடங்கல் ஏற்படாதவாறு பயணம்  அமைய வேண்டும் என்று  இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
 
விக்கிரகம் இன்றியும் பராமரிப்பு இன்றியும் இக்கோவில் பாழடைந்த நிலையில் காணப்படுவதால், பயணிகள் வணங்கிச் செல்வதற்காக எவ்வித கோவில்களும் குறித்த பிரதேசத்தில் இல்லை.
 
இக்கோவில் இலுக்குப்புல் தோட்டத் தொழிலாளர்களால் 1960ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் செய்யப்பட் வந்தது. இதன் பின்பு எவ்வித புனரமைப்பும் இன்றி இக்கோவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X