2025 மே 10, சனிக்கிழமை

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை ஞாயிற்றுக்கிழமை(17) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகத்தான்  குடியிருப்பு துரைச்சாமி வீதியைச் சேர்ந்த ரவீந்திரன் டிலக் ஷன் (வயது 36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், மைலம்பாவெளியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X