Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த விவசாயிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் நடத்தப்படும் பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வுக்காக கொழும்பு, கல்வியமைச்சிலிருந்து அதிகாரிகள் பயணித்த வாகனம், மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில்; வலப்பக்கமாக நின்ற இவர்கள் மீது மோதியதாக தெரியவருகின்றது.
இந்த வீதியைக் குறுக்கிட்டு சைக்கிளொன்று சென்றதால், அதை வாகனம் விலத்திச் செல்ல முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் மானிய உரம் பெறுவதற்காக வந்த முறக்கொட்டாஞ்சேனை, பாலையடித்தோணாவைச் சேர்ந்த எஸ்.நல்லம்மா (வயது 59), கிண்ணயடியைச் சேர்ந்த கே.மகேஸ்வரன் (வயது 49) ஆகியோரே படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago