2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்; சாரதி கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை - கும்புறுமூலை இராணுவ முகாமுக்குச் சொந்தமான வாகனம் பாடசாலை மாணவர்கள் சென்ற சைக்கிளில் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர்களான எம்.அனீக், ஏ.றிழா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இம்மாணவர்கள் உடனடியாக  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

இதன்போது, வாகனச்; சாரதியான இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X