Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (08) இரவு பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்று யானையின் மீது மோதியதில் யானை இறந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியானது வீதியை குறுக்கறுத்துச் செல்ல முற்பட்டன யானையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் வண்டிச் சாரதியும் அதில் பயணித்துக்கொண்டிருந்த பயணி ஒருவருமே காயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த யானை எட்டு வயது முதல் பத்து வயது மதிக்கத்தக்கதென வனஜீவராசிகள் பாதுகாப்;புத் திணைக்களத்தின் கிரான் காரியாலய உதவிச் சுற்றுவட்ட பாதுகாவலர் அஜந்த பிரியானந்த தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago