Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதி ஊடாக இன்று திங்கட்கிழமை காலை பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வண்டியொன்று களுதாவளைப் பகுதியிலுள்ள வீடு ஒன்றினுடைய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் சிறு காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து சாய்ந்தமருது நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளானது.
இதன்போது வீட்டு மதில் உடைந்துள்ளதுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்துத் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 minute ago
13 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
29 minute ago
32 minute ago