2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

விபத்தில் காயமடைந்த நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த எம்.இக்பால்(68) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உரிழந்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

இவர், ஏறாவூரிலிருந்து மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த போது மயிலம்பாவெளியில் வைத்து முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இது தொடர்பிலான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X