2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் சிக்கிய வயோதிபத் தம்பதியினரில் கணவன் பலி

Thipaan   / 2016 நவம்பர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் கிரான் பகுதியில், செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய வயோதிபத் தம்பதியினரில், கணவன் உயிரிழந்துள்ளார் என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

தங்களது பேரப்பிள்ளையின் பூப்படைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, கோராவெளி எனும் கிராமத்திலிருந்து கோரக்கல்லிமடுவுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, படி ரக வாகனமொன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சற்று நேரத்தில் கணவன் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சைக்கிளைச் செலுத்தி வந்த எஸ். கந்தையா (வயது 72) என்பவரே மரணித்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான அவரது மனைவி சந்திரசேகரி தங்கமணி (வயது 68) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X