2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தாயும் மகனும் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்த நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரைச்; சேர்ந்த வெள்ளைத்தம்பி செய்த்தூன் (வயது 36), ஏ.எச்.இஸ்ஹான் (வயது 06) ஆகியோரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஏறாவூர் நகர சபைக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கோட்டுக் கடவையைக் கடக்க முற்பட்டபோது,  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்  இவர்கள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X