2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பிரசாந்தன் காயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டியும் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த பிரசாந்தன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X