2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, பாலமீன்மடு பொதுச் சந்தைக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடு 2ஆம் குறுக்கைச் சேர்ந்த பாக்கியராசா கிருஷ்ணப்பிள்ளை (வயது 49), எஸ். சிவகுரு (வயது 42) மற்றும் சகாயநாதன் றொசாந்த் (வயது 20) ஆகியோரே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களாகும்.

றொசாந்த் என்ற இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளை என்பவர் மீதும் அவ்விடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிவகுரு என்பவர் மீதும் மோதியுள்ளது.

இதனால் கிருஷ்ணப்பிள்ளை என்பவர் பாரதூரமான காயங்களக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் பலமாக மோதியதன் காரணமாக சிவகுரு என்பருக்கு கை தோள் மூட்டு விலகியுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகள் இடம்பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மட்டக்களப்புப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X