2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெருகலம்பதி முருகன் கோவில் மஹோற்சவம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை வெருகலம்பதி முருகன் கோவில் வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இத்திருவிழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

வழமையை விட இம்முறை அதிகளவான பக்தர்கள் இத்திருவிழாவுக்கு வருகை தரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுவதினால் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், இடவசதி உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

சுகாதாரம் சம்பந்தமான ஏற்பாடுகள் வெருகல் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் கண்காணிப்பும் அமைய வெருகல் பிரதேச சபையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படுகின்றன. வழமையான நிரந்தர மலசலகூடங்களுக்கு மேலதிகமாக தற்காலிக மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தீர்த்தோற்சவக் காலத்தில் பக்தர்களுக்கு முதலைகளால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக வெருகல் கங்கைக்கரையில் கடற்படையினர் முழுமையான பாதுகாப்பைப் பொறுப்பெடுத்துள்ளனர்.

கோவிலுக்கு வருகை தரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை உவர்மலை கோணேஸ்வரா அன்னதான சபையினர் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போக்குவரத்து ஏற்பாடுகளை மூதூர் இலங்கைப் போக்குவரத்துச் சபையினரும், வாகரை டிப்போவினரும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .