Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்லடியில் உள்ள மேற்படி அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.ரி.பிரான்சிஸ் தலைமையில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சுசிலா பரமகுருநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாத் தடை இயக்க வைத்திய அதிகாரி மேகலா ரவிச்சந்திரன், கோட்டைமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி ரி.கலைச்செல்வி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், மட்டக்களப்பு மேல்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.ஆர்.அமான், மட்டக்களப்பு மனநல ஆற்றுப்படுத்தல் கல்லூரியின் பணிப்பாளர் எம்.நேசராஜ், கல்லடி வேலூர் கிராமசேவை உத்தியோகத்தர் ரி.சிவலிங்கம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு அங்கோடை மனநல வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் எம் கணேசன் தலைமையில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பணப்பரிசும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வறியக்கோட்டுக்குட்பட்ட ஒருவருக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக சைக்கிள் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago