2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வில்பத்து விவகாரம்; வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வில்பத்துப் பிரதேசத்துக்;குரிய வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிய தனிநபர் பிரேரணையை  மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதிக்கு திங்கட்கிழமை (17) அனுப்பி வைத்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

மாகாண சபையின் அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வில்பத்துக் காணிப் பிரச்சினை தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'வில்பத்துப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகள் உள்ளடக்கிய இடத்தை  அவசர அவசரமாக வன இலாகவுக்குரிய பிரதேசமாக வர்த்தமானி இடும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்  கூட நடைபெறாத இவ்வாறான விடயங்கள், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நடைபெறுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

எனவே, பொதுமக்களினுடைய காணிகளை உள்ளடக்கியதாக அறிக்கையிடப்பட்டுள்ள வில்பத்துப் பிரதேசத்துக்குரிய  வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரத்துச் செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .