Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
2017ஆம் ஆண்டு முன்வைக்கப்படவுள்ள வரவு –செலவுத்திட்டத்தின்போது, வேலைவாய்ப்பின்றியுள்ள பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, காந்தி பூங்காவின் முன்றிலிலிருந்து ஆரம்பமாகி மாவட்டச் செயலகம்வரை சென்றது. இதனை அடுத்து, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந் மகஜரைக் கையளித்தார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 31.3.2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்ற 1,400 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளடங்கலாக 5,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மேற்படி வெற்றிடங்களுக்கு பயிற்சி அடிப்படையிலாவது மேற்படி பட்டதாரிகளை இணைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மேலும், கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்திசெய்யப்படாத காரணத்தால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது, வெளியாகும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்காமை காரணமாகவே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன' எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

11 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago