2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் சுற்றாடல் பிரிவு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மட். வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் அமைந்துள்ள நூலகத்தில் சுற்றாடல் பிரிவு நேற்றுத் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை வளாகத்தில் அதிதிகளால் மரங்கள் நடப்பட்டதோடு, பாடசாலை அதிபரிடம் சுற்றாடல் தொடர்பான ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கே.எச்.முத்துஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், 'மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை 5 வருட செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வருடாந்தம் தலா ஒவ்வொரு பாடசாலையைத் தெரிவுசெய்து அப்பாடசாலையிலுள்ள நூலகத்தில் சுற்றாடல் தகவல் மையத்தை உருவாக்கி வருகின்றோம்' என்றார்.

'இங்கு வழங்கப்பட்டுள்ள நூல்கள் சுற்றாடல் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்கும் மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக இப்பாடசாலையில்தான் எமது அதிகார சபையினால் முதலாவது சுற்றாடல் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் நகர் புறங்களைத் தவித்து கிராமப்புறங்களுக்கு நாம் முன்னுரிமையளித்துச் இச்செயற்றிட்டத்தை அமுல்படுத்தி வருகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X