Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிரான் - தொப்பிகல பிரதான வீதி இன்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், இந்தப் பாதையூடாக பாதசாரிகள், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மாத்திரம் தற்போது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
குறித்த பகுதிக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெள்ளப்; பாதிப்புக்கள் தொடர்பில் பார்வையிட்டார். மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டால் உடனடியாக அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு தயாரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீரின் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் போக்குவரத்துக்காக படகுகள்; சேவை மேற்கொள்ளப்படும் என கிரான் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago