2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு அமைதிப் போராட்டம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்குப் பல்கலைக்கழக நலன்புரி முகாமில் இருந்தவர்களைக் கைது செய்து 25 ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவு கூர்ந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய  உறவினர்கள் ஈகைச்சுடர் ஏற்றி விழிப்புணர்வு அமைதிப் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை (05) ஈடுபட்டனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது செய்யப்பட்டு காணாமல்போன 158 பேரை நினைவு கூர்ந்ததோடு தமது உளத் தாக்கங்களையும் வெளிப்படுத்தினர்.

நாம் வேண்டுவதெல்லாம் புதைகுழி அல்ல புன்னகை மனிதர்களையே எனும் தலைப்பில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் வீதியில் பயணித்தோரிடம் உறவினர்களால் வழங்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏறாவூர் பிள்ளையார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜையில் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X