2025 மே 08, வியாழக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஷ்ணா

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம் நகர மணிக்கூட்டுக் கோபுரம்,திருமலை வீதி, பார் வீதி வழியாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது.

இதன்போது,மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் மற்றும் அவர்கள் பெற்ற அடைவு மட்டங்களை வெளிப்படுத்தும் வீதி நாடகங்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மாவட்ட சமூக சேவைகள்  உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை,மாற்றுத் திறனாளிகளின் இவ்வருடத்துக்கான ஆய்வுப் பொருளாக உள்வாங்கல் முக்கியமானதாகும், சகல ஆற்றல்களும் கொண்ட மக்களுக்கான அணுகு வசதியும் வலுவூட்டலும் எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X