Suganthini Ratnam / 2015 நவம்பர் 30 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று திங்கட்கிழமை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வுச் செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூலமான பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற திவிநெகும வாழ்வின் எழுச்சி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற ஏனைய பிரிவினைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மனித உரிமையின் பாதுகாப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், அனைத்துலக மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago