2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்புணர்வும் சட்ட உதவி நடமாடும் சேவையும்

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சட்ட வாரத்தையொட்டி, 'எமது சமூகத்துக்கான சட்டமும் நீதியும்' எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் சட்ட உதவி நடமாடும் சேவையும் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாக உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சனி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சட்ட உதவி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 300 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்குபற்றியதோடு இலவச சட்ட உதவி ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில், அடிப்படை உரிமைகளும் அது மீறப்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய பரிகாரங்களும் பற்றி இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு சட்ட உத்தியோகத்தர் மிருதினி சிறிஷ்குமார் விளக்கமளித்தார்.

குடும்பப் பிணக்குகளுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்கக் கூடிய நிவாரணங்கள் பற்றி இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு சட்ட உத்தியோகத்தர் காமலிற்றா சசிரூபன் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் சட்டத்தரணி ஆர். கண்ணன், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி, உள்ளிட்டோரும் இன்னும் பல சட்டத்தரணிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X