2025 மே 09, வெள்ளிக்கிழமை

வாவிக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமொன்று பயணம் செய்த முச்சக்கரவண்டி மட்டக்களப்பு வாவிக்குள் பாய்ந்ததில், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று (24) மாலை மட்டக்களப்பு நகரில் இருந்து, தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் ஆகியோர் சென்ற முச்சக்கரவண்டி, மட்டக்களப்பு நகர் புதுப்பாலத்தில் பாலத்தில் வைத்து வாவிக்குள் பாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், பிள்ளைகள் மற்றும் சாரதி ஆகியோரை மீட்டுள்ளனர்.

புதுப்பாலப்பகுதியில் முறையான வாவியோர பாதுகாப்பு தடுப்பு இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியில் விபத்துகள் இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் முச்சக்கர வண்டியை மீட்டதுடன், வாவிக்குள் விழுந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X