2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாவிகளில் ஒருவகைப் பாம்புகள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் முக்குலியான் எனப்படும் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாகக் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓர் அடி முதல் இரண்டரை அடி நீளமான பாம்புகளே இவ்வாறு காணப்படுகின்றன. இந்த பாம்புகள் இறந்த நிலையிலும்

கரையொதுங்கி வருகின்றன.
இந்தப் பாம்புகள் காரணமாக மீன் பிடியில் ஈடுபடுவதற்கு சிரமத்தை எதிர்நோக்குவதாகவும்  மீனவர்கள் கூறினர்.
இது தொடர்பாக மீன்பிடித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்ஸான் குறூசிடம் இன்று புதன்கிழமை கேட்டபோது, காலநிலை மாற்றம் காரணமாக மழைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், இவ்வாறு பாம்புகள் வருவதாகக் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X