2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வாவிகளில் ஜெலி மீன்கள் இறந்துள்ளன

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில வாவிகளில் ஜெலி மீன்கள் (சொறிமுட்டைகள்) இறந்த நிலையில் தற்போது கரையொதுங்கி வருகின்றன. மட்டக்களப்பு, காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலுள்ள வாவிகளிலேயே ஜெலி மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குகின்றன.

இவ்வாறு இறந்து கரையொதுங்கும் ஜெலி மீன்கள் காரணமாக கரைவலை போட்டு மீன்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு ஜெலி மீன்கள் இறந்துள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ருக்ஸான் குரூசிடம்  திங்கட்கிழமை கேட்டபோது, அதிக வெப்பமான காலத்தில் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர்; மாதங்களில் ஜெலி மீன்கள் வாவிகளில் காணப்படுவது வழமையாகும். மாரி காலத்தில் இது இல்லாமல் போய்விடும். இருப்பினும், இறந்த ஜெலி மீன்களின் மாதிரியை ஆய்வுக்காக நாரா நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X