2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாவியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன, வடிவேல் சக்திவேல்

முதலை கடித்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு, அம்பிளாந்துறை வாவியிலிருந்து சனிக்கிழமை (12) இரவு மீட்கப்பட்டுள்ளது.  

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயான மணியம் சகீலா (வயது 27) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

வாவியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் குறித்த வாவியில் சடலம் மிதப்பதைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளதுடன், சடலத்தையும் மீட்டுள்ளனர்.

சடலம் முதலைக் கடிக்குள்ளான நிலையில் காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X