2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விவசாய உபகரணங்கள் வழங்கல்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகள் 12 பேருக்கு விவசாய உபகரணங்களும் உள்ளீடுகளும் சனிக்கிழமை (05) வழங்கப்பட்டன.  

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவை வழங்கப்பட்டன. இதன்போது, 05 விவசாயிகளுக்கு தலா 5,445 ரூபாய் பெறுமதியான பீடை நாசினித் தெளிகருவிகளும் 07 விவசாயிகளுக்கு தலா 1,875 ரூபாய் பெறுமதியான நீர்க்குழாய்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் இளைஞர் விவசாய கழகத்துக்கு வழங்கப்பட்டதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X