2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான மதிப்பீட்டுப் பணி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் இம்முறை மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையில் பாதிப்பை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான மதிப்பீட்டுப் பணி திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டதாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.

போதிய மழை வீழ்ச்சி கிடைக்காமையால், விவசாயிகள்  பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.  
கடந்த வருட இறுதியில் பெரும்போகச் செய்கைக்கான விதைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைக்காமையால்,  மழையை மாத்திரம் நம்பி செய்கை பண்ணப்பட்ட சுமார் 90 சதவீதமான பெரும்போக நெற்செய்கை வெப்பம் காரணமாகக் கருகி அழிந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வாகரை, கிரான், வந்தாறுமூலை, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, பழுகாமம் ஆகிய நெற்செய்கைக் கண்டங்கள் வரட்சி காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.  

இவ்வருடம் இம்மாவட்டத்தில் 3,116 ஹெக்ரேயர் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X