Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுமுறிவுக்குள விவசாய அமைப்பு, மாவட்டத்திலுள்ள பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறிப்பினர்கள் ஆகியோரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்து திங்கட்கிழமை (19) கடிதம் அனுப்பியுள்ளதாக கட்டுமுறிவுக்குள விவசாய அமைப்பின் செயலாளர் ரி.ஜீ.குருகுலசிங்கம் தெரிவித்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இங்கு 1969இல் ஆரம்பிக்கப்பட்ட விவசாயத் திட்டத்தில் 485 விவசாயிகள், 1,200 ஏக்கர்வரை விவசாயம் செய்கின்றனர். 30 வருட காலமாக இடம்பெற்ற வன்செயல் காரணமாக விவசாயிகள் இடம்பெயர்ந்தமை மற்றும் விவசாயம் செய்யாமல் விட்டதால், வயல் காணிகளுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள், வயல் காணிகளுக்குச் செல்லும் வீதிகள் சேதமடைந்துள்ளன.
இவற்றைப் புனரமைப்பதற்காக வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவற்றுக்கு ஏறக்குறைய 6 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீருக்காக 6 கிணறுகள் தேவை, 10 கிலோமீற்றர் தூரத்துக்கு வயல் வீதிகள் அமைப்பட வேண்டும், கை வாய்க்காலிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு 4 குழாய்கள்; 400 தேவை, வடிச்சல் வாய்க்கால் 8 கிலோமீற்றர் புனரமைக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கான சந்தை வாய்ப்பை ஜனவரி மாத இறுதியில் ஏற்படுத்துதல், போதியளவான யானை வெடிகள் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago