2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு, கிழக்கு மக்களின் 'பிரச்சினைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 03 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன,; எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்களில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனப் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் புதுவருட நிகழ்வு,  திங்கட்கிழமை (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க இந்த வருடத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் பாரிய அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கு இந்த அமைச்சினால் நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X