Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 31 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு, வடக்கு, கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் இனியாவது ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
இல்லாவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்புக்கு கேள்விக் குறியான நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட் செயலணியை கண்டித்து, ஊடகங்களுக்கு நேற்று (30) அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமப்பை மேற்கொள்ளுவதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன், இந்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கில் ஒரு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
“சிங்கள மக்களை மையப்படுத்தி தான் இனி திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளுமே தவிர, முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான தனிதிட்டங்களை மேற்கொள்ளாது” எனவும் தெரிவித்த அவர், கற்றுக்கொண்ட பாங்கள் மூலமாக முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நன்கு உணர்ந்து செயற்படவேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .