Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
வாகரை, வட்டவான் கடற்கரை வீதியை மக்களின் பாவனைக்கு விடுமாறு கோரி, வட்டுவான் கிராமத்தில் மட்டக்களப்பு -திருகோணமலை வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வட்டவான் கிராம மக்கள் பல வருடகாலமாக பயன்படுத்திவந்த இந்த வீதி, தனது தென்னந்தோட்டக் காணிக்குள் அமைந்துள்ளதாகக் கூறி, 2016ஆம் ஆண்டு முதல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தனி நபரொருவர் அவ்வீதியை அடிக்கடி சேதமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அக்கிராம மக்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டமை தொடர்பில் வாகரைப் பிரதேச செயலகம், பிரதேச சபை, மீன்பிடித் திணைக்களம், கரையோரம் பேணல் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்களின் பாவனைக்குரிய குறித்த வீதியை மக்களின் போக்குவரத்துக்;கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, 'இது தொடர்பாக விசாரிக்குமாறு சீ.யோகேஸ்வரன் எம்.பியும் நானும் 3 மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு எழுத்து மூலம் பணித்துள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .