2025 மே 08, வியாழக்கிழமை

வன்முறைகளை ஒழிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிக்கக்; கோரியும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தியும் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கவனயீர்ப்புப் பேரணியும் விழிப்புணர்வு வீதி நாடகமும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகார சபை, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகியன இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த இப்பேரணியையும் நாடகத்தையும் நடத்தியது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி, கொக்கட்டிச்சோலை சந்திவரை சென்றது. சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார பகுதியினரின் வீதி நாடமும் நடைபெற்றது.

'வன்முறையற்ற நாடும் வீடும் எங்களுக்கு வேண்டும்', 'பெண்களின் சமத்துவமான பங்களிப்பே நிலையான அபிவிருத்திக்கு வித்திடும்', 'வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு', 'வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு' ஆகியவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X