Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அனர்த்து முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமையை எதிர்கொள்ளல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக இந்த வரட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்சிப் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நடைபெற்றது.
இதில், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல், விவசாயங்களுக்கு வழங்கவேண்டிய நீர்ப்பாசனம், மாவட்டத்தின் தற்போதைய நீர்க் கொள்ளளவு சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்ற நீர்ப்பாசனம், நீர்வழங்கல்;, உள்ளூராட்சி, உள்ளிட்ட திணைக்களங்களிடம் வரட்சியை எதிர்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தின் குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் உள்ளுராட்சிதச் சபைகளுக்கான நீர் விநியோக வவுசர்களின் இருப்பு மேலதிக தேவைகளுக்கான கொள்வனவுகள், நீர்த்தாங்கிகள் வழங்குதல், நிவாரண உதவிகள், சமைத்த உணவுகள் வழங்குதல், வாழ்வாதார உதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
அத்துடன், காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்காததனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் இக் கூட்டத்தில் மிக முக்கியமாக ஆராயப்பட்டன.

25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago