Princiya Dixci / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண இணைந்து சேவை உத்தியோகத்தர்களின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தை, மார்ச் மாதம் 01ஆம் திகதியிலிருந்து மீளச் செயற்படுத்துமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல செயலாளர்களுக்கும், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு சுற்றுநிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும், நேரத்துக்கு நேரம் மாகாணத்தின் பல பகுதிகள் முடக்கப்படுவதன் காரணமாகவும், இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்களை செயற்படுத்துவதற்கு தடைகள் ஏற்பட்டிருந்ததால், மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய, கடந்த 18ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவிருந்த வருடாந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்ததாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் உரிய முறைப்படி விடுவிப்பைப் பெற்று, குறிப்பிட்ட திகதியில் புதிய சேவை நிலையங்களில் கடமையைப் பொறுப்பேற்று, அது பற்றி அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், படவினைஞர் உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
24 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago