Princiya Dixci / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு நகர சபைகள் 8 பிரதேச சபைகள் ஆகியவற்றின் தவிசாளர்களின் விடயங்கள் தொடர்பில் தன்னால் முன்னதாக வெளியிடப்பட்ட கட்டளையைத் தான் விலக்கிக் கொண்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 08ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், அம்பாறை நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை பொத்துவில், பதியத்தலாவ, இறக்காமம், மண்முனை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, தம்பலகாமம், சேருவில ஆகிய பிரதேச சபைகளில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையைத் தீர்க்கும் முகமாக விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த விசாரணைகள் முடியும் வரை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் உப தலைவர்களைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தான் கட்டளை இடுவதாகவும் ஆளூநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியிருந்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago