Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வாகரை மீனவர் சமூகநல அமைப்பினரால் வாகரை பிரதேசத்தில்; 10 வறிய குடும்பங்களுக்கு, நேற்று திங்கட்கிழமை (02) கோழி வளர்ப்புக்காக சுயதொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசகர் வேலாயுதம் உதயராஜ் தெரிவித்தார்.
வாகரை மீனவ சமூகநல அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர் சங்கத்தின் ஊடாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு முட்டை இடும் நல்லின கோழிக்குஞ்சுகள் தலா 30, அதற்கான தீன் பாத்திரங்கள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.
03 மாத காலத்தில் கோழிக் குஞ்சுகள் வளர்ந்து முட்டையிடத் தொடங்கியதும் அந்த வருமானத்தைக் கொண்டு மேற்படி மீனவர் சங்கத்துக்கு சிறு தொகையாக இக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஊக்கமுள்ள உற்பத்தியளார்கள் தெரிவுசெய்யப்பட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்;நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர். இராகுலநாயகி கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான சமூக சேவையாளர் என். மோகனதாஸ் வறிய குடும்பங்களுக்கான இந்த கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு சுமார் 03 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago