Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் நாளை (30) மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்றை நடத்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத் தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பேரணி, கல்லடி பாலத்தில் இருந்து காலை 08 மணிக்கு ஆரம்பமாகி, காந்திபூங்காவரையில் சென்று, அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.
வட, கிழக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களில் கிழக்கு மாகாணத்திலும் அதிகளவான மக்கள் காணப்படுகின்றனர் எனவும் பெரும்பாலானோர் தளர்ந்த நிலையிலும் போக்குவரத்துகள் செய்யமுடியாத நிலையிலும் உள்ளமையைக் கருத்தில்கொண்டே மட்டக்களப்பில் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் இணைத் தலைவி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago