Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க. விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமைகைக் கண்டித்தும் அவர்களின் படுகொலைக்கு நிதியான விசாரணைகளைக் கோரியும், மட்டக்களப்பில் இன்று (15) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில், காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
”துப்பாக்கிக் கலாசாரம் வேண்டாம்”, “பயங்கரவாத அடக்குமுறை வேண்டாம்”, “கொலைகளைத் தடுப்போம் - அநீதிகளை வெறுப்போம்” என்னும் கோஷத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான நவரெட்னராஜா, கட்சியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ், ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.வசந்தகுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் மீண்டும் பயங்கரமான சூழ்நிலையொன்று ஏற்படுவதை யாரும் அனுமதிக்கக்கூடாது என, இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
3 hours ago