Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 10 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மட்டக்களப்பு - வாகரைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி செய்கையாளர்களின் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை, அபயம் அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால், வாகரைப் பிரதேச விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலீடு இட்டு, விவசாய செய்கையை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் அறுவடையை விற்கமுடியாது, தமது தோட்டங்களில் அவற்றைக் கைவிட்டு வருகின்றனர்.
இவ்விவசாயிகளின் பாதிப்பைக் குறைக்கும் பொருட்டு, விவசாயிகளின் அறுவடைகளை கொள்வனவு செய்வதற்காக, வாகரைப் பிரதேசத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினியின் வேண்டுகோளின்படி, அபயம் அமைப்பினர் ரூ.50,000 பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளை, வாகரைப் பகுதியிலுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
3 hours ago
4 hours ago