2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வானிலை மாற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, வ.சக்தி   

தாழமுக்கம் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல  பிரதேசங்களில் தற்போது கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளத தேவையில்லையெனவும் அவர் அறிவித்தினார். 

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராங்குளம், குருக்கள்மடம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், களுதாவளை, கேட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் இம்மாதம் 15ஆம் திகதி இரவு கிணறுகளின் நீர்  திடீரென வற்றியுள்ளன.

எனினும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இது சாதாரணமாக நிகழ்கின்ற விடயம் எனவும் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.

இதுபோன்ற நிலைமை, 2018ஆம் ஆண்டு ஏற்பட்டதாகவும் அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பாக உடனடியாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமெனவும், தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 0773957883 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியுமெனவும், அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .