2025 மே 09, வெள்ளிக்கிழமை

வானிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்துக்கு மட்டக்களப்பு தெரிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்

வானிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தித் திட்டத்துக்கு  மட்டக்களப்பு மாவட்டமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக வங்கியால் முன்னெடுக்கப்பட்டும் இந்த விவசாய அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், மாவட்டச் செயலகத்தில், நேற்று முன்தினம் (09) நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வானிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தித் திட்டம், 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்கு மொத்தமாக 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்புக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கை அரசினுடைய நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், ஏறாவூர்ப் பற்று பிரதேச  செயலகப் பிரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ், முந்தானை ஆறு அணைக்கட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

வெள்ளம், வரட்சி, இயற்கை அனர்த்தங்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்காகவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X