2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வான் குடைசாய்ந்ததில் ஐவர் படுகாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள சத்துருக்கொண்டான் வளைவில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வானொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வான் சாரதி உட்பட வானில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனரென, மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள், வீதியால் சென்றோரால் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எம். ஜெய்னுதீன் (வயது 72) அவரது மனைவி (வயது 65), எம். றிஷாட் (வயது 36) அவரது மனைவி (வயது 35) மற்றும் முஹம்மட் ஸக்கூர் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெலிமடையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த வான் சத்துருக்கொண்டான் வளைவில், வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குடைசாய்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .