2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை பிரதேச விவாயிகள் பெரிதும் பாதிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கொரோனா வைரஸ் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற நிலையில், வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச விவாயிகள் தள்ளப்பட்டுள்ளனரென,  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 விவசாயிகள் பாரியளவிலான விவசாய செய்கையை மேற்கொண்டு, தற்கால சூழலில் விளைச்சல் பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையில் எமது விளைச்சல் பொருள்களான கத்தரி, வெண்டிக்காய், தக்காளி, பயிற்றங்காய், மிளகாய், வெங்காயம், மரவள்ளி போன்ற பொருள்களை விற்பனை செய்வது குறைவாகவே காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிகின்றனர்.

அதாவது களுதாவளை, தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி உட்பட்ட பல பிரதேசங்களில் இருந்து மரக்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதால் தங்களது பிரதேசங்களில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர்.

எனவே, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்களில் விற்பனை செய்வதற்கும், மாவட்டங்களின் இருந்து வரும் ஏனயை விவசாயிகளின் பொருள்களை கொள்வனவு செய்வதுடன், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுகின்றனர். 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கூடிய கவனம் செலுத்தி, வாழைச்சேனை பிரதேச விவசாயிகள் மரக்கறி பொருள்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வாழைச்சேனை பிரதேச விவாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X